Wednesday 31 October 2012

இரண்டு கடன்காரர் உவமை

2 . இரண்டு கடன்காரர் உவமை ( Parable of the Two Debtors)
                                                       வேத வசனம் 
                                                        லூக்கா 7:36-48



பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.அந்நகரில் பாவியான  ஒரு பெண் இருந்தாள் . இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவளுக்குத் தெரியவந்தது. உடனே அவள் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தாள்





Monday 29 October 2012

இரக்கமற்ற பணியாளன் உவமை

 1. இரக்கமற்ற பணியாளன் உவமை  ( Parable of the unforgiving servant )    
வேத வசனம்
லூக்கா 17 : 3 - 4 & மத்தேயு 18 : 21 - 35



இயேசுவின் சீடரான பேதுரு இயேசுவிடம் தன் சகோதரர்,சகோதரிகளுள் ஒருவர் தனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டப்போது பதிலாக ( இயேசு ) கூறிய உவமையாகும்அரசர் ஒருவர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான்.
 தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குறிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.



Friday 26 October 2012

இயேசுவின் உவமைகள்

தங்களை  ஆண்டவர்  இயேசு  கிறிஸ்துவின்  இனிய  நாமத்தில்  வாழ்த்தி  வரவேற்கிறேன்.


"இயேசுவின் உவமைகள்"




இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு (மத்தேயு, மாற்கு, லூக்கா,யோவான்)  நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள், விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன.

 இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது உவமைகள் வழி 
போதித்தார்.அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ: