Sunday 9 December 2012

காணாமல் போன காசு உவமை


9.காணாமல் போன காசு உவமை (Parable of the Lost Coin)


வேத வசனம் 
லூக்கா 15 : 8 - 10


இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் இரண்டாவதாகும்.  நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன ஆடு உவமை, ஊதாரி மைந்தன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது.







ஒரு பெண்ணிடம் இருந்த பத்துத் வெள்ளிக்காசுகளுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவள்  விளக்கைக் கொளுத்தி,


வீட்டைப் பெருக்கி  அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும்,


  அவள்  தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு  சந்தோஷப்படுங்கள் ,


 ஏனெனில் காணாமற் போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்பாள்.

கருத்து

காணாமல் போன காசு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது பரலோகத்தில் மிக மகிழ்ச்சி உண்டாகும் என்பது இதன்  கருத்தாகும்.

                                                                வேத வசனம் 


                                                                லூக்கா 15 : 8 - 10


    8. அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?

    Either what woman having ten pieces of silver, if she lose one piece, doth not light a candle, and sweep the house, and seek diligently till she find it?

    9. கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?

    And when she hath found it, she calleth her friends and her neighbours together, saying, Rejoice with me; for I have found the piece which I had lost.

    10. அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

    Likewise, I say unto you, there is joy in the presence of the angels of God over one sinner that repenteth.

              தொடரும்........





0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!