Sunday 2 December 2012

காணாமல் போன ஆடு உவமை


8.காணாமல் போன ஆடு உவமை  ( Parable of the Lost Sheep)


வேத வசனம் 

லூக்கா 15:1-7 

இயேசு மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகள்
(i)காணாமல் போன ஆடு உவமை ( ii)காணாமல் போன காசு உவமை(iii)ஊதாரி மைந்தன் உவமை

காணாமல் போன ஆடு உவமை இயேசு  கூறியமுதலாவது உவமை ஆகும். காணாமல் போன ஆடு உவமை  ,காணாமல் போன காசு உவமை,ஊதாரி மைந்தன் உவமை என்பவை  ஒரே பொருளை கொண்டிருக்கிறது.

சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது



ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?



கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு  சந்தோஷப்படுங்கள் . ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்" என்பார்.


கருத்து

காணாமல் போன ஆடு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது பரலோகத்தில் மிக மகிழ்ச்சி உண்டாகும்.

 நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் .என்பது இதன்  கருத்தாகும்.
வேத வசனம்


லூக்கா 15:1-7  

1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
Then drew near unto him all the publicans and sinners for to hear him.

2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
And the Pharisees and scribes murmured, saying, This man receiveth sinners, and eateth with them.

3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
And he spake this parable unto them, saying,

4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
What man of you, having an hundred sheep, if he lose one of them, doth not leave the ninety and nine in the wilderness, and go after that which is lost, until he find it?

5. கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,
And when he hath found it, he layeth it on his shoulders, rejoicing.

6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
And when he cometh home, he calleth together his friends and neighbours, saying unto them, Rejoice with me; for I have found my sheep which was lost.

7. அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
I say unto you, that likewise joy shall be in heaven over one sinner that repenteth, more than over ninety and nine just persons, which need no repentance.



 தொடரும்........





0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!