Sunday 18 November 2012

கடுகு விதை உவமை

6.கடுகு விதை உவமை  (Parable of the Mustard Seed)

வேத வசனம் 

லூக்கா 13:18-19,  மாற்கு 4:30-32,  மத்தேயு 13:31-32 







கடுகு விதை நிலத்தில் விதைக்கப் படும்பொழுது ( எல்லா விதைகளையும்விடச் சிறியது) கடுகு இங்கே குறிக்கப்படுவது 










''பாலஸ்தீன நாட்டில் வளரும் ஒருவகை கடுகு மரம்''



அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்  

''தேவனுடைய ராஜ்ஜியம் ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும்'' ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அச்சிறிய விதை வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு இருப்பிடமும் நிழலும் தருவதாய் இருந்ததுதேவ‌னுடைய‌ ராஜ்ஜியம் கடுகு விதையைப் போல‌ மிக‌ப்பெரிய‌ ந‌ன்மையுள்ள‌ ஈவுக‌ளை உள்ள‌ட‌க்கியுள்ள‌து என‌ விவ‌ரிக்கிறார். 

                                                                             கருத்து

இயேசு தேவனுடைய ராஜ்ஜியத்தை கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார்.எவ்வளவு பெரிய செயல்களும் ஒரு சிறிய ஆரம்பத்தையே கொண்டிருக்கின்றன என்பதாகும் இவ்வுவமையின் கருத்தாகும்.

வேத வசனம் 

லூக்கா 13:18-19

18. அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?

Then said he, Unto what is the kingdom of God like? and whereunto shall I resemble it?

19. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.

It is like a grain of mustard seed, which a man took, and cast into his garden; and it grew, and waxed a great tree; and the fowls of the air lodged in the branches of it.

மாற்கு 4:30-32

30. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?

And he said, Whereunto shall we liken the kingdom of God? or with what comparison shall we compare it?

31. அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;

It is like a grain of mustard seed, which, when it is sown in the earth, is less than all the seeds that be in the earth:

32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.

But when it is sown, it groweth up, and becometh greater than all herbs, and shooteth out great branches; so that the fowls of the air may lodge under the shadow of it.

 மத்தேயு 13:31-32 

31. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.

Another parable put he forth unto them, saying, The kingdom of heaven is like to a grain of mustard seed, which a man took, and sowed in his field:

32. அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகுமென்றார்.

Which indeed is the least of all seeds: but when it is grown, it is the greatest among herbs, and becometh a tree, so that the birds of the air come and lodge in the branches thereof.

தொடரும்........
 பதிவு:07






0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!