Thursday 1 November 2012

இரண்டு மகன்கள் உவமை

 3. இரண்டு மகன்கள் உவமை  ( Parable of the Two Sons )
                                                         வேத வசனம் 
                                                         மத்தேயு 21 : 28 - 32


இயேசு ஆலயதுக்குள் போதித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் அவரை அணுகி,"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டபோது அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயேசு இவ்வுவமையை கூறினார்.




ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் முத்தவரிடம் போய்,"மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்றார். அவர் மறுமொழியாக,"நான் போக விரும்பவில்லை" என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை         மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக,"நான் போகிறேன் ஐயா." என்றார் ஆனால்                                                                                                                            போகவில்லை  .                                                                                                              






  முதலில் போகமறுத்து பின் சென்ற புதல்வர் பாவிகளாக இருந்து மனம் மாறியவரை குறிக்கிறது. இவர்கள் முதலில் கடவுளின் சொல்கேளாமல் நடந்தனர் ஆனால் பின்னர் மனம் மாறி கடவுள் சொற்படி நடந்தனர்.





                                                               கருத்து,

 முதலில் போகிறேன் எனச்சொல்லி பின் போகமலிருந்த புதல்வர், கடவுள் கூறியவற்றை செய்வதாக கூறி வெளிவேடமிட்டவர்களாகும். இவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் இடம் பிடிக்க மாட்டார்கள் என்பது இவ்வுவமையின்  கருத்தாகும்.



                                                             வேத வசனம்

                                                        மத்தேயு : 21 : 28 - 32


28. ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.


28. But what think ye? A certain man had two sons; and he came to the first, and said, Son, go work to day in my vineyard.



29. அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.


29. He answered and said, I will not: but afterward he repented, and went.


30. இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.


30. And he came to the second, and said likewise. And he answered and said, I go, sir: and went not.


31. இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


31. Whether of them twain did the will of his father? They say unto him, The first. Jesus saith unto them, Verily I say unto you, That the publicans and the harlots go into the kingdom of God before you.


32. ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.

32. For John came unto you in the way of righteousness, and ye believed him not: but the publicans and the harlots believed him: and ye, when ye had seen it, repented not afterward, that ye might believe him.



பதிவு: 4

 தொடரும்........





0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!