Sunday 25 November 2012

கனிகொடா அத்திமரம் உவமை


7.கனிகொடா அத்திமரம் உவமை  ( Cursing the fig tree )

வேத வசனம் 

லூக்கா 13:6-9 




இது பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்கவிருப்பதை விளக்கும் கதையாகும். மத்தேயு, மாற்கு நற்செய்திகளில் அத்திமரம் பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் அவை உவமை வடிவில் இல்லாமல், இயேசு ஒரு கனிகொடா அத்திமரத்தைக் கண்டு அதனை சபித்ததாகவும் உடனே பட்டுப்போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன், எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் வீணாக அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்றார். 





தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப் போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார்.




கருத்து


இதில் தோட்டக்காரர் கடவுளாகும். தொழிலாளர் பரிசுத்த ஆவியாகும். ஒரு மனிதனுக்கு கடவுள் அவனது பாவ வழிகளை விட்டு திரும்ப பல சந்தர்ப்பங்களை கொடுப்பார். ஆனால் பலன் இல்லாது போனால் கனிகொடா அத்திமரம் வெட்டப்பட்டு தீயில் போடப்படுவது போல நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்பது இதன்  கருத்தாகும்.



வேத வசனம் 

லூக்கா 13:6-9 

6. அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.

He spake also this parable; A certain man had a fig tree planted in his vineyard; and he came and sought fruit thereon, and found none.

7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

Then said he unto the dresser of his vineyard, Behold, these three years I come seeking fruit on this fig tree, and find none: cut it down; why cumbereth it the ground?

8. அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,

And he answering said unto him, Lord, let it alone this year also, till I shall dig about it, and dung it:

9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.

And if it bear fruit, well: and if not, then after that thou shalt cut it down.


  தொடரும்........
   பதிவு: 08






0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!