Sunday 30 December 2012

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை


12.செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை (The Sheep and the Goats)
வேத வசனம் 
மத்தேயு 25:31-46 
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களையும், பாவிகளையும் பிரிப்பார்,இது வலை உவமையுடன் ஒத்த கருத்து, பொருளைக் கொண்டுள்ளது. வலை உவமை வரும் நாள்க்களில் காண்போம்!!ஓர் மேய்ப்பன் (ஆயர்) தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. செம்மறியாடுகளையும்,வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்.



Sunday 23 December 2012

கோதுமையும் களைகளும் உவமை

11.கோதுமையும் களைகளும் உவமை  (Parable of the Tares)


வேத வசனம் 
மத்தேயு 13:24-30 

வீட்டெஜமான் ( எஜமான் & பண்ணையாளர்)  ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய வேலைக்காரர்  (பணியாள்கள் ) தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து,  கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.









Sunday 16 December 2012

கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை

10.கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை (New Wine into Old Wineskins)

வேத வசனம் 
லூக்கா 5:36-39, மாற்கு 2:18-22 


யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள்.  வர்கள் அவரிடத்தில் வந்து, யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் 







Sunday 9 December 2012

காணாமல் போன காசு உவமை


9.காணாமல் போன காசு உவமை (Parable of the Lost Coin)


வேத வசனம் 
லூக்கா 15 : 8 - 10


இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் இரண்டாவதாகும்.  நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன ஆடு உவமை, ஊதாரி மைந்தன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது.








Sunday 2 December 2012

காணாமல் போன ஆடு உவமை


8.காணாமல் போன ஆடு உவமை  ( Parable of the Lost Sheep)


வேத வசனம் 

லூக்கா 15:1-7 

இயேசு மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகள்
(i)காணாமல் போன ஆடு உவமை ( ii)காணாமல் போன காசு உவமை(iii)ஊதாரி மைந்தன் உவமை

காணாமல் போன ஆடு உவமை இயேசு  கூறியமுதலாவது உவமை ஆகும். காணாமல் போன ஆடு உவமை  ,காணாமல் போன காசு உவமை,ஊதாரி மைந்தன் உவமை என்பவை  ஒரே பொருளை கொண்டிருக்கிறது.

சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது