Sunday 16 June 2013

புளித்த மா உவமை

25.புளித்த மா உவமை (Parable of the Leaven)
வேத வசனம்
மத்தேயு 13:33, லூக்கா 13:20-21





இயேசு பரலோகராஜ்ஜியத்தை புளித்த  மாவிற்கு (ஈஸ்ட்) ஒப்பிடுகிறார்.
பெண் ஒருத்தி புளித்த மாவை எடுத்து முன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தாள். மாவு முழுவதும் புளிப்பேறியது. பரலோக ராஜ்ஜியம் இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.







இது பரவலைக்லைக் குறிக்கிறது. அதாவது புளித்த  மா சிறிய அளவாகும் ஆனால் அது மூன்று மரக்கல் மாவையுமே புளிக்கச் செய்கிறது. இதுபோல உலகில் பரலோகராஜ்ஜியத்தை தரும் கிறிஸ்தவமும் சிறிய ஆரம்பத்திலிருந்து பெரிய அள‌விற்கு பரவும் என்பது இதன் பொருளாகும். மேலும் இயேசு சாத்தானின் புளிப்பு மா குறித்தும் எச்சரிக்கையாக இருக்க கூறுகின்றார்.



கருத்து,


ஒருவர் தனக்குள் பாவத்தை சிறிய அளவு செய்தாலும் அது அவ‌ன‌து முழு ப‌ரிசுத்த‌ வாழ்க்கையையும் பாழ்ப‌டுத்திவிடுகிற‌து.

வேத வசனம்
மத்தேயு 13:33

     வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

    Another parable spake he unto them; The kingdom of heaven is like unto leaven, which a woman took, and hid in three measures of meal, till the whole was leavened.

                                                            லூக்கா 13:20-21

     மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?

    And again he said, Whereunto shall I liken the kingdom of God?

     அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

    It is like leaven, which a woman took and hid in three measures of meal, till the whole was leavened.

தொடரும்..........






0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!