Sunday 28 July 2013

பொல்லாத குத்தகையாளர் உவமை

26.பொல்லாத குத்தகையாளர் உவமை
Parable of the Wicked Husbandmen
வேத வசனம்:


இது  பரிசுத்த வேதாகமத்தின், புதிய ஏற்பாட்டின் மத்தேயு 21:33-41மாற்கு12:1-9லூக்கா 20:9-15 என்ற வசனங்களில் காணப்படுகிறது. இது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் கூறிய உவமையாகும். இது இயேசுவின் மரணத்தை முன்னறிவிக்கிறது.








ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் செய்து தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நெடு பயணம் மேற்கொண்டார். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.
பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.

பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், "நான் என்ன செய்வேன்என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்" என எண்ணி. மகனை தோட்டத்துக்கு அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், "இவன்தான் சொத்துக்கு உரியவன் நாம் இவனைக் கொலை செய்வோம். அப்போது சொத்து நமதாகும் என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்.
அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா
கருத்து
தோட்டக்காரர் கடவுளாகவும், அவர் தோட்டத்துக்கு அனுப்பிய பணியாளர் இறைவாக்கினர் ஆகவும், தோட்டக்காரரின் மகன் இயேசு ஆகவும் உவமானப்படுத்தப் பட்டுள்ளது. கடவுள் பூமிக்கு பல இறைவாக்கினரை அனுப்பினார் ஆனால் மக்கள் அவர்களை புரக்கனித்தார்கள். கடவுள் இறுதியாக தமது மகனை அனுப்பினார் அனால் மக்களோ அவரை பிடித்து கொன்றனர். இதனால் கடவுள் அம்மக்களது அதிகாரத்தை பறித்து வேறு மனிதரிடம் கொடுப்பார் என்பது இதன் கருத்துகும்.

மாற்கு 12 :1 - 9,

வேத வசனம்:
    1. பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
    And he began to speak unto them by parables. A certain man planted a vineyard, and set an hedge about it, and digged a place for the winefat, and built a tower, and let it out to husbandmen, and went into a far country.

    2. தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்.
    And at the season he sent to the husbandmen a servant, that he might receive from the husbandmen of the fruit of the vineyard.

    3. அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.
    And they caught him, and beat him, and sent him away empty.

    4. பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
    And again he sent unto them another servant; and at him they cast stones, and wounded him in the head, and sent him away shamefully handled.

    5. மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
    And again he sent another; and him they killed, and many others; beating some, and killing some.

    6. அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.
    Having yet therefore one son, his wellbeloved, he sent him also last unto them, saying, They will reverence my son.

    7. தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
    But those husbandmen said among themselves, This is the heir; come, let us kill him, and the inheritance shall be ours.

    8. அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.
    And they took him, and killed him, and cast him out of the vineyard.

    9. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
    What shall therefore the lord of the vineyard do? he will come and destroy the husbandmen, and will give the vineyard unto others.





0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!