Friday 26 April 2013

பத்து கன்னியர் உவமை

22.பத்து கன்னியர் உவமை (Parable of the Ten Virgins)
வேத வசனம் : 
மத்தேயு 25:1-12.

இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து சொல்லப்பட்ட உவமையாகும்.
அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் (விளக்குகளைப்)பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.




Monday 15 April 2013

நேர்மையான பணியாள் உவமை

21.நேர்மையான பணியாள் உவமை(Parable of the Faithful Servant)
வேத வசனம்
மாற்கு 13:34-37, மத்தேயு 24:42-51, லூக்கா 12:35-40

ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போகும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.





அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.


நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

கருத்து

இவ்வுவமை இயேசுவின் இரண்டாவது வருகயை குறிக்கிறது. . இதனை மரணம் வரு முன்னர் இயேசு கூறிய போதனைகளை பின்பற்ற வேண்டும் என்ற பொருளிலும் கொள்ளலாம்.நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் (இயேசு) வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்,அவரது போதனைப் படி நடவுங்கள்,என்பது இவ்வுவமையின் கருத்தாகும்.


வேத வசனம்
மாற்கு 13:34-37


    34. ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.
    For the Son of man is as a man taking a far journey, who left his house, and gave authority to his servants, and to every man his work, and commanded the porter to watch.

    35. அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
    Watch ye therefore: for ye know not when the master of the house cometh, at even, or at midnight, or at the cockcrowing, or in the morning:

    36. நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
    Lest coming suddenly he find you sleeping.

    37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
    And what I say unto you I say unto all, Watch.