Friday 24 May 2013

பரிசேயனும் பாவியும் உவமை

23.பரிசேயனும் பாவியும் உவமை(Pharisee and the Publican)

வேத வசனம்

லூக்கா 18:10-14


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், (பரிசேயர் எனப்படுபவர்கள் மத திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள்) மற்றவன் ஆயக்காரன்.(ஆயக்காரன் எனப்படுபவர்கள் வரிவசூலிப்பவர்.இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர்.





பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.




ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். 




கருத்து,

இங்கு பரிசேயன் கடவுளிடம் தன்னை தாழ்த்தவில்லை அவன் கடவுளிடம் தன் சுயத்தை மறைக்க என்னினான். இதனால் அவனது வேண்டுதலை கடவுள் புறக்கனித்தார்.
ஆனால் ஆயக்காரன்(வரிவசூலிப்பவரோ )கடவுள் முன்னதாக தன்னை தாழ்த்தினார். தன் பாவங்களை கூறினார்.இதனால் அவனது வேண்டுதல் ஏற்கப்பட்டது.
அவனல்ல,(பரிசேயன்) இவனே(ஆயக்காரன் )நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில்

தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.



வேத வசனம்
லூக்கா 18:10-14


10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
Two men went up into the temple to pray; the one a Pharisee, and the other a publican.

11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
The Pharisee stood and prayed thus with himself, God, I thank thee, that I am not as other men are, extortioners, unjust, adulterers, or even as this publican.

12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
I fast twice in the week, I give tithes of all that I possess.

13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
And the publican, standing afar off, would not lift up so much as his eyes unto heaven, but smote upon his breast, saying, God be merciful to me a sinner.

14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
I tell you, this man went down to his house justified rather than the other: for every one that exalteth himself shall be abased; and he that humbleth himself shall be exalted.




0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!