Sunday 27 October 2013

வலை உவமை

30.வலை உவமை 
 parable of Drawing in the Net
வேத வசனம்  
மத்தேயு 13 அதிகாரம் 47 - 50


வலை உவமை இரண்டு வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்னிணைப்பாக இன்னுமொரு ஒரு வசனமே மட்டுமேயுள்ள உவமையையும் கூறுகின்றார்..







மீனவன் ஒருவன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்காக வலையை கடலில் வீசுகின்றான்.வலையில் மீன்கள் சேர்ந்தவுடன் எல்லா வகையான மீன்களையும் சேர்த்து வாரிக் கப்பலில் இட்டுக் கரைக்கு கொண்டு வருகின்றான். கரைக்கு வந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பான். ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.


கருத்து
மீன் பிடிக்கும் நிகழ்ச்சி உலக முடிவு நாளாகும். மீனவர் தேவதூதர்கள். அவர்கள் உலக முடிவில் உலகம் முழுவதும் சென்று நீதிமான்களிடமிருந்து,தீயோரைப் பிரிப்பர். அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
வேத வசனம்
மத்தேயு 13 அதிகாரம் 47 – 50
47. அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
Again, the kingdom of heaven is like unto a net, that was cast into the sea, and gathered of every kind:

48.
அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
Which, when it was full, they drew to shore, and sat down, and gathered the good into vessels, but cast the bad away.

49.
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
So shall it be at the end of the world: the angels shall come forth, and sever the wicked from among the just,

50.
அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
And shall cast them into the furnace of fire: there shall be wailing and gnashing of teeth.






0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!