Sunday 11 November 2012

ஊதாரி மைந்தன் உவமை

5. ஊதாரி மைந்தன் உவமை ( Parable of the Prodigal Son)
                                              வேத வசனம்
                                              லூக்கா 15:11-32
ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை,

இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட ஆயக்காரரும்(வரி வசூல் செய்பவர்), பாவிகளும் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்ட்வர்களும் பாவம் செய்தவர்களாகவே யூத சமயத்தவரால் கருதப்பட்டனர்) அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.



 அப்பொழுது தங்களை நல்லவர்களாக, பாவம் அறியாதவர்களாக எண்ணிக்கொண்ட பரிசேயரும் வேதபாரகரும் (யூத கோயிலில் மதகுருகள்) தமக்குள், இவர்(இயேசு) பாவம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார்.

ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தன் தகப்பனிடத்தில், தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத்தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார்.


சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் விற்று சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே ''தீய வழிகளில் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்தான்'' 




எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று.அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.



அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலையாள்கள் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன், உம்முடைய வேலையாள்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.


அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். மகனானவன் தகப்பனிடத்தில்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன் என்று சொன்னான்.




அப்பொழுது தகப்பன் தன் வேலையாள்களிடம்:  நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.



                           
அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, வேலையாள்களில் ஒருவனை அழைத்து, இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காக விருந்து செய்கிறார் என்றான்.




அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பதிலாக: இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு வருந்தி உழைத்தேன், ஒருக்காலும் உம்முடைய கட்டளையை மீறாதிருந்தும், என் நண்பரோடே நான் இன்மாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்த உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக சமைத்து விருந்து கொண்டாடுகிரே என்றான்.



அதற்குத் தகப்பன் : ''மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ இறத்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் ஆனபடியினாலே, நாம் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டாமோ என்று சொன்னார்''



                                                                    கருத்து,

''ஆயிரம் நல்லவர்கள் நல்வழியில் வாழ்வதை பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரே கெட்டமனிதனால் இறைவன் மிகுந்த இன்பம் அடைவார்.எவ்வளவு பாவம் செய்து நாம் தவறிப்போனாலும். நாம் பாவங்களை உணர்ந்து இறைவனிடம் திரும்பும் போது அவர் நம்மை மன்னித்து ஏற்கிறார்'' இவ்வுவமையின் கருத்தாகும்.


                                                           வேத வசனம்

                                                           லூக்கா 15:11-32


11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.

And he said, A certain man had two sons:

12. அவர்களில் இளையவன் தன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

And the younger of them said to his father, Father, give me the portion of goods that falleth to me. And he divided unto them his living.

13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

And not many days after the younger son gathered all together, and took his journey into a far country, and there wasted his substance with riotous living.

14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,

And when he had spent all, there arose a mighty famine in that land; and he began to be in want.

15. அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

And he went and joined himself to a citizen of that country; and he sent him into his fields to feed swine.

16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

And he would fain have filled his belly with the husks that the swine did eat: and no man gave unto him.

17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

And when he came to himself, he said, How many hired servants of my father's have bread enough and to spare, and I perish with hunger!

18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

I will arise and go to my father, and will say unto him, Father, I have sinned against heaven, and before thee,

19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

And am no more worthy to be called thy son: make me as one of thy hired servants.

20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

And he arose, and came to his father. But when he was yet a great way off, his father saw him, and had compassion, and ran, and fell on his neck, and kissed him.

21. குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

And the son said unto him, Father, I have sinned against heaven, and in thy sight, and am no more worthy to be called thy son.

22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.

But the father said to his servants, Bring forth the best robe, and put it on him; and put a ring on his hand, and shoes on his feet:

23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.

And bring hither the fatted calf, and kill it; and let us eat, and be merry:

24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.

For this my son was dead, and is alive again; he was lost, and is found. And they began to be merry.

25. அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு;

Now his elder son was in the field: and as he came and drew nigh to the house, he heard music and dancing.

26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.

And he called one of the servants, and asked what these things meant.

27. அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.

And he said unto him, Thy brother is come; and thy father hath killed the fatted calf, because he hath received him safe and sound.

28. அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

And he was angry, and would not go in: therefore came his father out, and entreated him.

29. அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.

And he answering said to his father, Lo, these many years do I serve thee, neither transgressed I at any time thy commandment: and yet thou never gavest me a kid, that I might make merry with my friends:

30. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

But as soon as this thy son was come, which hath devoured thy living with harlots, thou hast killed for him the fatted calf.

31. அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

And he said unto him, Son, thou art ever with me, and all that I have is thine.

32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்

It was meet that we should make merry, and be glad: for this thy brother was dead, and is alive again; and was lost, and is found.


தொடரும்..........

பதிவு : 6







0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!