Monday 28 July 2014

வளரும் விதை உவமை

                                          31. வளரும் விதை உவமை
                                                   Parable of the Growing Seed

                    வேத வசனம்
                மாற்கு 4 அதிகாரம் 26-29


வளரும் விதை இயேசு கூறிய ஓர் உவமானக் கதையாகும். இது விவிலியத்தில் மாற்கு 4:26-29 இல் குறிப்பிடப்பட்டுள்ளது



இது தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றியதாகும் .சரியான காலத்தில் ஒருவர் தனது தோட்டதில் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. 


முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார். ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது" என்று கூறினார்.



                               கருத்து

யிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறது  போல தேவனுடைய ராஜ்யமானது சமீபமாயிருக்கிறது என்பது இவ்வுவமையின் கருத்தாகும்.

வேத வசனம்
மாற்கு 4 அதிகாரம் 26-29

26. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;

And he said, So is the kingdom of God, as if a man should cast seed into the ground;

27. இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.

And should sleep, and rise night and day, and the seed should spring and grow up, he knoweth not how.

28. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.

For the earth bringeth forth fruit of herself; first the blade, then the ear, after that the full corn in the ear.

29. பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

But when the fruit is brought forth, immediately he putteth in the sickle, because the harvest is come.






0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!